News December 24, 2025

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சிக்கிய 5.700 கிலோ கஞ்சா!

image

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டபோது 5.700 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News

News December 24, 2025

திண்டுக்கல்: வீடு கட்டப்போறீங்களா? FREE

image

திண்டுக்கல் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 24, 2025

இருளில் மூழ்கிய திண்டுக்கல்!

image

திண்டுக்கல் பஸ் ஸ்டாடண்ட், முக்கிய ரோடுகளை தவிர புறநகர் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லாத நிலை நீண்ட நாட்களாக தொடர்கிறது. குறிப்பாக சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி என பல இடங்களில் தெரு விளக்கு வசதிகள் போதிய அளவில் இல்லை என கூறப்படுகிறது. விளக்குகள் அமைத்து போதிய வழிகாட்டல் பலகைகள் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News December 24, 2025

வேடச்சந்தூர் அருகே விபத்து

image

கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் விவசாயி சுப்பிரமணி (70). திண்டுக்கல்-கரூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள எத்திலாம்பட்டி சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் சென்றார். கரூர்-திண்டுக்கல் ரோடு தனியார் ஓட்டல் முன்பு சாலையை கடக்கும் போது பின்னால் வந்த கார் மோதி சுப்பிரமணி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!