News December 23, 2025

சனி பெயர்ச்சி.. 5 ராசிகளுக்கு எச்சரிக்கை

image

2026-ல் சனி பகவானின் தாக்கத்தால், மேஷம், கும்பம், மீனம், சிம்மம், தனுசு ஆகிய ராசியினர், குடும்பத்தில் பதற்றம், மன அழுத்தம் என பல சவால்களை சந்திக்க கூடுமாம். இதற்கு பரிகாரமாக, சனிக்கிழமைகளில் கருப்பு எள், கருப்பு குடை, கடுகு எண்ணெய் உள்ளிட்டவற்றை தானம் செய்வது நல்லது. மேலும், சனி பகவானின் சன்னதியில் தீபம் ஏற்றுதல், ஆஞ்சநேயரை வழிபடுதல் ஆகியவை சிறந்த பரிகாரமாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Similar News

News December 28, 2025

கடவுளிடம் கோலிக்காக வரம் கேட்பேன்: நவ்ஜோத் சிங்

image

கடவுள் தனக்கு ஒரு வரம் கொடுத்தால், கோலி டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றதை மீட்டு மீண்டும் விளையாட வைப்பேன் என முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். நாட்டின் 150 கோடி மக்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது எனவும், கோலி தனது ஃபிட்னஸ் அடிப்படையில் இன்னும் 20 வயதிலேயே நீடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் 24 காரட் தங்கம் என்றும் புகழ்ந்துள்ளார்.

News December 28, 2025

இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

image

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வகை உணவுகளால் இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவுடன் ஒப்பிடுகையில் சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடு முன் யோசிக்கவும்.

News December 28, 2025

தாயின் சடலத்துடன் 20 நாள்கள் வாழ்ந்த இளைஞர்!

image

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில், தாயாருடன் வசித்து வந்தவர் பிரவீன் கால்கோ. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாய்க்கு, வீட்டிலேயே சிகிச்சை பார்த்து வர, திடீரென உயிரிழந்துள்ளார். தாயின் பிரிவை தாங்க முடியாமல், அதிர்ச்சியில் கடும் மன அழுத்தத்திற்கு சென்ற அவர், 20 நாள்களாக தாயின் சடலத்துடன் ஒரே அறையில் வசித்துள்ளார். உடல் அழுகி, துர்நாற்றம் வீசிய பிறகே இந்த துயர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

error: Content is protected !!