News December 23, 2025
குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியமா?

குளிர்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால் பலர் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. ஆனால் வெயில் இல்லையென்றாலும் புற ஊதா கதிர்களின் தாக்கம் குறையாது. இதனால் குளிர்காலத்தில் SPF 30 கொண்ட சன்ஸ்கிரீன்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என சரும நல டாக்டர்கள் சொல்கின்றனர். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனை அப்ளை செய்யுங்கள். நீங்கள் தினமும் செய்யும் Skin Care எது?
Similar News
News December 25, 2025
போக்சோ வழக்கில் கைதாகும் RCB வீரர்

போக்சோ வழக்கில் ஜாமின் கோரிய RCB வீரர் யஷ் தயாலின் மனுவை ஜெய்ப்பூர் போக்சோ கோர்ட் நிராகரித்துள்ளது. கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி எமோஷ்னல் பிளாக்மெயில் செய்து சிறுமி ஒருவரை யஷ் தயால் பலாத்காரம் செய்ததாக புகாரளிக்கப்பட்டது. மொபைல் Chat, போட்டோக்கள், ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. கைதாகும் பட்சத்தில் அவர் IPL-ல் விளையாட முடியாமல் போகலாம்.
News December 25, 2025
பட்டுப்புடவையில் தேவதையாக கீர்த்தி ஷெட்டி!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. Gen Z-யின் கனவு கன்னியாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் ரெகுலராக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பட்டுப்புடவையில் தேவதையாக மின்னும் அவரது போட்டோக்களை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் மேலே SWIPE பண்ணி பாருங்க…
News December 25, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு!

தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹20 உயர்ந்து ₹12,820-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,02,560-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,360 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


