News December 23, 2025
மயிலாடுதுறை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வரும் டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News January 19, 2026
மயிலாடுதுறை: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News January 19, 2026
மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், கொள்ளிடம் வட்டாரத்தில் இன்று 19ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், சுகாதாரப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் வீடு வீடாக சென்று அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். எனவே வீடு தேடி வரும் சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
News January 19, 2026
மயிலாடுதுறை: கிலோ கணக்கில் போதை பொருள் – ஒருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில், காணும் பொங்கல் முன்னிட்டு, குற்ற சம்பவங்களை தடுக்க, போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறை காவல் சரகத்தில், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த பாலாஜி (45) என்பவரை, போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர்.


