News December 23, 2025

கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்!

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், எப்படியாவது மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் நோக்கில், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கைகோர்த்துள்ளனர். அதன்படி, சிவசேனா (உத்தவ்) 157 இடங்களிலும், ராஜ் தாக்கரேவின் நவநிர்மான் சேனா 70 இடங்களிலும் களமிறங்க உள்ளன. ஜன.15-ல் நடைபெறும் மும்பை மாநகராட்சி தேர்தலில், காங்., தனித்து போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Similar News

News January 14, 2026

விஜய்க்கு ஆதரவு.. திமுக அதிர்ச்சி

image

‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக <<18845192>>ராகுல் காந்தி<<>>, குரல் கொடுத்துள்ளது திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், ‘பராசக்தி’ படத்தில் காங்கிரஸுக்கு எதிராக தவறான காட்சிகள் உள்ளதாக <<18844133>>காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு<<>> கிளம்பியுள்ளது. ஏற்கெனவே, காங்., MP-க்கள், மூத்த தலைவர்கள் கூட்டணி, ஆட்சியில் பங்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் கூறி வருவதால் திமுக – காங்., கூட்டணியில் சலசலப்பு நிலவுகிறது.

News January 14, 2026

Cinema Roundup: ‘போர்’ முரசு ஒலிப்பாரா தனுஷ்?

image

*அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தின் 2-ம் பாடல் வெளியானது. *பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வரும் 23-ம் தேதி ரிலீசாகிறது. *தனுஷ் நடிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் இயக்கும் ‘D54’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என தகவல். *‘மரகத நாணயம் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. *அல்லு அர்ஜுன் -லோகேஷ் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.

News January 14, 2026

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(ஜன.14) சற்று குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $11 குறைந்து $4,597-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!