News December 23, 2025

இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

image

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.

Similar News

News January 14, 2026

ஷக்ஸ்காம் விவகாரம்.. சீனாவுக்கு இந்தியா எதிர்ப்பு

image

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனா கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. ஆனால் 1963-ல் பாகிஸ்தானுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம், CHN-PAK இடையினால பொருளாதார திட்ட அடிப்படையிலேயே கட்டுமான பணிகள் நடப்பதாக சீனா கூறியது. இந்த 2 ஒப்பந்தங்களையும் IND ஏற்கவில்லை என்றும், இதில் நாட்டின் நலன்கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளியுறவுத்துறையின் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

News January 14, 2026

சிவாஜியின் பராசக்திக்கு 130 கட் கொடுத்தார்கள்: வானதி

image

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளியான சிவாஜியின் பராசக்தி படத்திற்கு 2 நாட்கள் சென்சார் செய்து, 130 கட் கொடுக்கப்பட்டதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் எமர்ஜென்சி மூலம் இந்தியாவின் குரல்வளையை நெறித்தது காங்கிரஸ் தான் என்றும், ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தின் கையில் இருக்கிறது எனத் தெரிந்தும் வேண்டுமென்றே பாஜகவை ராகுல்காந்தி குறை கூறுவதாகவும் வானதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News January 14, 2026

TCS-ல் பணி நீக்கம் தொடர்கிறது!

image

AI-ன் தாக்கத்தால் கடந்த 6 மாதங்களில் 30,000 பேரை TCS நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் தங்களது நிறுவனத்தில் மறுசீரமைப்பு திட்டம் முடியவில்லை என்றும், தேவைப்பட்டால் 2026-லும் பணி நீக்கம் தொடரும் எனவும் TCS தெரிவித்துள்ளது. 3-வது காலாண்டின் முடிவிற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. செப். காலாண்டில் 19,755 பேரையும், டிச. காலாண்டில் 11,151 பேரையும் TCS பணிநீக்கம் செய்திருந்தது.

error: Content is protected !!