News December 23, 2025
அதிமுக + பாமக கூட்டணி… முடிவை அறிவித்தார்

அதிமுக, பாஜக இடையே நடத்த பேச்சுவார்த்தையில் பியூஷ் கோயலிடம் EPS பட்டியல் ஒன்றை கொடுத்துள்ளார். இதில், முக்கிய விஷயமாக கூட்டணியில் பாமகவிற்கும் அவர் தொகுதி ஒதுக்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக(170), பாஜக(23), பாமக(23), மற்றவைக்கு(18) எத்தனை தொகுதிகள் என குறிப்பிட்டு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாம். PMK இன்னும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், EPS தொகுதிகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 1, 2026
மானத்தை விட்டுட்டு விஜய் கூட்டணிக்கு போறதா? திருமா

திமுகவிடம் சண்டை போட்டு கூடுதல் ‘சீட்’ கேட்போமே தவிர, கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என திருமா கூறியுள்ளார். மக்கள் ஆதரவு விஜய்க்கு இருப்பதால் திமுக கூட்டணி தோற்றுவிடும் என பலர் சொல்வதாக குறிப்பிட்ட அவர், தோற்றுவிடுவோம் என்பதற்காக மானத்தை விட்டுவிட்டு தவெக கூட்டணியில் இணைய முடியுமா என கேட்டுள்ளார். மேலும், ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
புத்தாண்டில் வந்த சோகம்.. 128 பேர் பலி!

2025-ல் உலகளவில் 128 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(IFJ) கவலை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக இஸ்ரேல்-பாஸ்தீனப் போரில் மட்டும் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தற்போது உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர். இதுவெறும் புள்ளிவிவரம் அல்ல, இது நமது சக ஊழியர்களுக்கான உலகளாவிய அபாய எச்சரிக்கை என IFJ தெரிவித்துள்ளது.
News January 1, 2026
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுப்பேன்: ஜெலன்ஸ்கி

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஜெலன்ஸ்கி, போர் நிறுத்த ஒப்பந்தம் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்தால், அதனை ஏற்க மறுப்பேன் என கூறியுள்ளார். மேலும், இந்த போர் முடிவுக்கு வரவேண்டுமே தவிர உக்ரைனுக்கு முடிவு வந்துவிடக் கூடாது எனவும், சரணடையும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


