News May 1, 2024
ஒற்றை ஆளாக போராடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ்

மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது, மார்கஸ் ஸ்டாய்னிஸ் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 7 Four, 2 Six என விளாசி தனது 9ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்த அவர், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இது லக்னோ அணிக்கு கிடைக்கும் 6ஆவது வெற்றியாகும்.
Similar News
News February 11, 2026
விஜய் வருகையால் பயத்தில் திமுக: தங்கமணி

சிறுபான்மையினர் வாக்கு தவெகவிற்கு சென்றுவிடுமோ என்ற பயத்தில் திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் விவகாரத்தில் கூட திமுக அரசியல் செய்வதாக தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DMK அரசு தவறிவிட்டது. இதையெல்லாம் மனதில் வைத்து வரும் தேர்தலில் ADMK கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்; தமிழகமும் வளர்ச்சி அடையும் என்றார்.
News February 11, 2026
திமுகவிடம் டிமாண்ட் செய்யும் மமக

2021-ல் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு 5 தொகுதி ஒதுக்கிய திமுக, அதனை வரும் தேர்தலில் <<19072975>>4 முஸ்லிம் கட்சிகளுக்கு<<>> ( முஸ்லிம் லீக், மமக, SDPI, தமிமுன் அன்சாரி) பகிர்ந்தளிக்க திமுக முடிவெடுத்துள்ளதாம். இது இஸ்லாமிய கட்சிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டு பெறுவோம் எனக் கூறியுள்ள ஜவாஹிருல்லா, தனிச் சின்னத்தில் போட்டியிட திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News February 11, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 11, தை 28 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


