News December 23, 2025

செங்கல்பட்டு: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT

Similar News

News January 12, 2026

செங்கை: கைவரிசை காட்டப்போய் ‘பல்பு’ வாங்கிய கும்பல்

image

அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சமையல் கூடத்திற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், ஜன்னல் கண்ணாடியை உடைத்து மின்சார அடுப்பு உள்ளிட்ட பொருட்களைத் திருட முயன்றனர். அமுயற்சி தோல்வியடைந்ததால், அங்கிருந்த டியூப் லைட்டை மட்டும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு காவலாளியை வேலைக்கு எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News January 12, 2026

மாமல்லபுரம்: ஒரு நொடியில் பறிபோன உயிர்!

image

கோவளம் – மாமல்லபுரம் இடையே நடைபெற்ற டிரையத்லான் போட்டிக்காக, பனையூர் பகுதியில் கொடிக்கம்பங்கள் நடும் பணியில் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த மெய்யப்பன் (29) ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பம் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி மெய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

News January 12, 2026

செங்கை: பெண் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி!

image

ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த பூர்ணிமா (34), தனது கணவர் சரவணகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சினிமா பார்க்கச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த பூர்ணிமா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் நிரஞ்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!