News December 23, 2025
தஞ்சாவூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மக்களே.. அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
Similar News
News January 15, 2026
தஞ்சை அருகே விவசாயி தற்கொலை

ஒரத்தநாடு அருகே திருநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பா. விவசாயியான இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி கண்ணப்பாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக, மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை தூக்கிட்டு செய்து கொண்டார். இதையடுத்து ஒரத்தநாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
தஞ்சை ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

தஞ்சை மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News January 15, 2026
தஞ்சை: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை தஞ்சை மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (8012232577) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!


