News May 1, 2024

நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை

image

நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால், தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு, “மன்னித்து விடுங்கள் அப்பா. இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது” என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

Similar News

News February 1, 2026

திண்டுக்கல்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

திண்டுக்கல் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 1, 2026

செமி கண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்துக்கு ₹40,000 கோடி

image

இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்து உற்பத்தி மையமாக மேம்படுத்த, ‘பயோ பார்மா சக்தி’ திட்டத்தை அறிமுகப்படுத்தி ₹10,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் FM நிர்மலா சீதாராமன். இது உயிரியல் மற்றும் உயிரி மருந்துகளின் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்யும் சூழலை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், Semi Conductor Mission 2.0-வுக்காக ₹40,000 கோடியை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

News February 1, 2026

சிகரெட் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

image

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 40% GST வரி உயர்வுடன் சிகரெட், பான் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, சாதாரண சிகரெட்​ (65 mm) ₹2.10, Medium சிகரெட்​ (70mm) ₹4, பிரீமி​யம் சிகரெட் (75 mm) ₹5.40 வரை விலை உயர்ந்து விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் புகை பிடிப்போர் கலக்கம் அடைந்துள்ளனர். (ADVISORY: சிகரெட் புகைக்காதீர்)

error: Content is protected !!