News December 23, 2025
அதிமுக, பாஜகவின் வியூகம்.. EPS விளக்கம்

2026 தேர்தல் வியூகங்கள் குறித்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன், EPS ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த EPS, தங்கள் கூட்டணி தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற திட்டங்கள் குறித்து முதற்கட்டமாக ஆலோசித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், திமுக ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் உள்ளதால் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
கூட்டணி முடிவை விஜய் அறிவிப்பார்: செங்கோட்டையன்

CM ஸ்டாலின் தொடங்கிவைத்த வைகோவின் ‘சமத்துவ நடைப்பயணத்தை’ காங்கிரஸ் <<18740431>>புறக்கணித்ததால்<<>> திமுகவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்ற கருத்து மேலும் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கூட்டணி பற்றி தவெக தலைவர் விஜய்தான் அறிவிப்பார் என அவர் பதிலளித்துள்ளார்.
News January 3, 2026
இனி கல்யாணம் பண்ணாலும் கிரீன் கார்டு கிடைக்காது!

USA-வில் டிரம்ப் நிர்வாகம், குடியேற்ற சட்டங்களை மிக கடுமையாக்கி வரும் நிலையில், இதில் அடுத்த டார்கெட் Marriage Green Card. அமெரிக்கரை திருமணம் செய்தால் கிரீன் கார்டு பெறலாம் என்பதாலேயே, பல திருமணங்கள் நடைபெற்று வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அமெரிக்க குடிமகனை திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே கிரீன் கார்டு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
News January 3, 2026
வேலு நாச்சியார் துணிச்சல் மிக்கவர்: PM மோடி

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த வேலு நாச்சியாரின் தியாகமும் தொலைநோக்கு தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என PM மோடி கூறியுள்ளார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார் என்றும் மோடி X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


