News December 23, 2025
‘ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தங்கம் விற்பனை’

ரேஷன் கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளை மலிவு விலையில் விற்குமாறு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச் சங்க தலைவர் லிங்கபெருமாள் வலியுறுத்தியுள்ளார். CM தனிப்பிரிவில் அவர் அளித்துள்ள மனுவில், விலை உயர்வால் கல்லூரி செல்லும் ஏழை மாணவிகள் சிறிதளவு நகை கூட அணிய முடியாத நிலை உள்ளது. இதனால், கூட்டுறவு வங்கி, ரேஷன் கடையில் மலிவு விலையில் தங்கம், வெள்ளி நகைகளை விற்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 30, 2025
ஒரேநாளில் ₹23,000 குறைந்தது.. ALL TIME RECORD

இதுவரை இல்லாத வகையில் வெள்ளி விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹23 குறைந்து ₹258-க்கும், கிலோ வெள்ளி ₹23,000 குறைந்து ₹2,58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாள்களாக வெள்ளி விலை கிலோவுக்கு ₹41,000 உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
News December 30, 2025
LPG கேஸ்: இதை செய்யலன்னா பெரிய RISK!

LPG சிலிண்டரை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த சில வழிகள் உள்ளன. ➤சிலிண்டரை சாய்த்து வைக்க வேண்டாம் ➤காற்றோட்டமான இடத்தில் வையுங்கள் ➤வெப்பம் அதிகமாக உள்ள இடத்திலோ, மின்சாதனங்களுக்கு அருகிலோ வைக்க வேண்டாம் ➤சமைக்கும்போது நைலான் & பாலியஸ்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம் ➤சிலிண்டரை அடுப்போடு இணைக்கும் ரப்பர் குழாயை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும். SHARE.
News December 30, 2025
கம்பீரே தொடர்வார்: ராஜீவ் சுக்லா

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு <<18695088>>தனி பயிற்சியாளரை<<>> நியமிக்க BCCI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கம்பீரின் பதவிக்காலம் முடியும் வரை, அதாவது 2027 வரை அவரே பயிற்சியாளராக தொடர்வார் என BCCI துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்பீரை நீக்கும் எண்ணம் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


