News December 23, 2025
ஸ்டார்பக்ஸ் தலைமை பொறுப்பில் தமிழர்

சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா என உலக அளவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவரிசையில் இணைந்துள்ளார் இந்திய வம்சாவளியான ஆனந்த் வரதராஜன். ஸ்டார்பக்ஸ், தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆனந்தை நியமித்துள்ளது. சென்னை IIT பட்டதாரியான இவர், அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். வரும் ஜன.19-ம் தேதி அவர் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
Similar News
News January 12, 2026
விஜய்க்கு பல கதைகள் சொன்ன ‘பகவந்த் கேசரி’ இயக்குநர்!

விஜய்யின் கடைசி படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். ஆனால், ரீமேக் வேண்டாம், நேரடி தமிழ் படம் இயக்குகிறேன் என பல கதைகளை கூறியதாகவும், ஆனால் ‘பகவந்த் கேசரி’ விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், விஜயின் கடைசி படம் எப்போதும் ரிலீஸானாலும் சாதனை படைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
புல்லட் ரயில் தாமதத்திற்கு ₹88,000 கோடி விலை!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் (மும்பை – அகமதாபாத்) 2029 டிசம்பரில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சூரத் – பிலிமோரா இடையே 2027 ஆக.15-ம் தேதி இயக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முதலில் ₹1.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் கொரோனா, நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட காரணங்களால் 4 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதால், அதன் செலவுகள் தற்போது ₹1.98 லட்சமாக உயர்ந்துள்ளது.
News January 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 578 ▶குறள்: கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. ▶பொருள்:கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.


