News December 23, 2025

கரூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே..,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News January 17, 2026

கரூரில் குவிக்கப்படும் போலீஸ்!

image

கரூர் மாவட்டத்தில் ஒரே இடத்தில் மட்டுமே நடைபெறக்கூடிய ஆர்டிமலை ஜல்லிகட்டு விழாவைக்காண 5000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் மாவட்ட எஸ்பி ஜோஸ்.தங்கையா தலைமையில் 1 ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பிக்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், 51 சப்இன்ஸ்பெக்டர்கள், 258 போலீஸார், 112 ஊர்காவல் படையினர் உள்ளிட்ட 442 பேர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுள்ளனர்.

News January 17, 2026

குளித்தலை அருகே பெண் துடிதுடித்து பலி!

image

கரூர்: குளித்தலை அருகே போத்தராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு மனைவி மலர் (60). இவர் கடந்த வாரம் வீட்டில் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பற்றி கொண்டது. அருகில் இருந்தவர்கள் போர்வையால் தீயை அணைத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

கரூர் அருகே அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு, மகன் இளங்கோவன் 53. இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார், மது விற்ற இளங்கோவன் மீது வழக்குப்பதிந்து, இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!