News December 23, 2025
விழுப்புரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 31, 2025
விழுப்புரத்தில் 1300 போலீசார் பணியில் ஈடுபடவுள்ளனர்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸாா் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 63 இடங்களில் போலீஸாா் (டிச.31) வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனா். பொது இடங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை. இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
News December 31, 2025
விழுப்புரம்: இ-சேவை மையம் இயங்காது

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை (டிசம்பர் 31) மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜனவரி 1) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகையொட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
விழுப்புரம் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


