News December 23, 2025
வேலூர்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

வேலூர் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 12, 2026
வேலூரில் சிறுத்தை நடமாட்டமா?

குடியாத்தம் அடுத்த ராகிமானபல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கால்நடைகள் கத்தியுள்ளன. இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை ஒன்று சற்று தொலைவில் திரிந்து கொண்டிருந்தது. உடனடியாக கிராம மக்கள் கும்பலாக சத்தமிட்டு வந்த உடன் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடியது. இது குறித்து வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News January 12, 2026
வேலூரில் மர்ம நபர்கள் கைவரிசை!

வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தில் அமர்ந்திருந்த பொறியியல் மாணவர் திலிப்குமார் மற்றும் அவரது உறவினர் சரவணனிடம், அவசரத்திற்கு பேசுவதாகக் கூறி 2 மர்ம நபர்கள் செல்போன் கேட்டுள்ளனர். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன்களைப் பறித்துத் தப்பினர். புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வசந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், உசேன் ஆகியோரை கைது செய்தனர்.
News January 12, 2026
வேலூர்: கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி!

காட்பாடி அருகே அம்முண்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற பொறியியல் மாணவர்கள் கௌதம் (25) மற்றும் கோகுல் (25), எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த திருவலம் போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


