News December 23, 2025
கள்ளக்குறிச்சியில் 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <
Similar News
News January 14, 2026
ஆட்சியருக்கு மண்பானை வழங்கிய விசிக பெண் நிர்வாகி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்தை, நேற்று விசிக மாநில மகளிர் அணி செயலாளர் வேல்.பழனியம்மாள் சந்தித்தார். அப்போது, ஆட்சியரிடம் விசிக-வின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமான பானை மற்றும் பனை வெல்லம் கொடுத்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில் விசிக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: மாமியாரால் தூக்கில் தொங்கிய மருமகள்!

கள்ளக்குறிச்சி: தச்சூரைச் சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி சரண்யா (32). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வசந்தகுமார் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வீட்டு வேலை சரியாக செய்யவில்லை என மருமகள் சரண்யாவை மாமியார் தேவி நேற்று முன்தினம் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்ற ஆசிரியர்கள்!

கள்ளக்குறிச்சி: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் போட்டியில், உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள் ராஜவேல், கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.


