News April 30, 2024
IPL: லக்னோ அணி வெற்றி

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதிரடியாக விளையாடிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அரைசதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், 12 புள்ளிகளுடன் 3ஆவது முன்னேறியது லக்னோ அணி.
Similar News
News March 4, 2026
மேலும் ரூ.1,000 அறிவித்தார் ஸ்டாலின்.. இன்ப அதிர்ச்சி

டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை ₹1,000 உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் 24,033 டாஸ்மாக் ஊழியர்கள் பயன் பெறுவர் என்றும், அவர்களுக்கு ESI மருத்துவ, சமூக பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
பட்டாசை வெடிக்கும் நியூசிலாந்து

T20 WC அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து அபாரமாக விளையாடி வருகிறது. 170 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் நியூசிலாந்து அணி, 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. டிம் சீஃபர்ட் அரைசதம் விளாசி ரபாடா பந்தில் கிளின் போல்ட் ஆனார். ஆலன் அரைசதத்தை கடந்து களத்தில் உள்ளார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பில் சிக்ஸரும், பவுண்டரிகளும் பறந்தன.
News March 4, 2026
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு.. பாமகவுக்கு 1 சீட்

ராஜ்யசபா அதிமுக வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுவார் என EPS அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நாளையுடன் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ள நிலையில், <<19299051>>திமுக<<>>, அதிமுக அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.


