News December 23, 2025
வட்டி குறையும்… லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்

ரெப்போ வட்டி விகிதத்தை RBI மேலும் குறைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் UBI வங்கி வெளியிட்ட ஆய்வறிக்கையில், வரும் பிப்ரவரி மாதம் ரெப்போ விகிதம் 25 bps குறைக்கப்படலாம் என கணித்துள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டில் 4 முறை குறைக்கப்பட்டு, தற்போது 5.25% ஆகவுள்ளது. இந்நிலையில், மேலும் ரெப்போ வட்டி குறைந்தால் வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் குறையும்.
Similar News
News January 10, 2026
குடியரசு தின விழாவுக்காக 1,275 கிலோ போன்லெஸ் சிக்கன்

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்புக்காக முப்படைகளும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் தயாராகி வருகின்றன. அதனுடன் 1,275 கிலோவுக்கும் அதிகமான போன்லெஸ் சிக்கனும் தயாராகிறது. ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். விமான சாகசத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பருந்துகளுக்கான உணவாக இந்த சிக்கனை வனத்துறை, IAF உடன் இணைந்து விருந்தளிக்கவுள்ளது. இது எப்படி இருக்கு?
News January 10, 2026
ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த காங்., MP

தேர்தல் காலத்தில் ED, CBI, IT போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என EPS கூறியிருப்பது திவால்தனத்தின் ஒப்புதலா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுக தனித்த அடையாளத்தை கொண்டிருந்ததாக கூறிய அவர், இன்று அது அமித்ஷாவின் அதிமுக இயந்திரத்தின் துணை அலுவலகமாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 10, 2026
BREAKING: யாருடன் கூட்டணி.. ஓபிஎஸ் புதிய அறிவிப்பு

அதிமுகவில் OPS-க்கான கதவுகளை EPS அடைத்ததால், அவர் தனிக்கட்சி முடிவில் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த OPS-யிடம் தவெகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொறுமையாக இருங்கள்; தை பிறந்தாள் வழி பிறக்கும் என சூசகமாக கூறினார். முன்னதாக TTV, OPS தவெகவுடன் இணைவார்கள் என KAS கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.


