News December 23, 2025
குமரி: பொதுத்தேர்வுகளுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பக்கலாம்

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு; மார்ச் ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள்: நேற்றுமுதல் 07/01/2026 வரையிலான நாட்களில் ( அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News January 17, 2026
குமரி: டிகிரி போதும்… ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 17, 2026
குமரி: காதல் தோல்வியால் இளைஞர் விபரீத முடிவு…

தக்கலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (24). பட்டதாரியான இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் திடீரென ஸ்ரீகாந்திடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த ஸ்ரீகாந்த் நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
குமரி: தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி

நெல்லை- அம்பை பகுதியை சேர்ந்தவர் விஷ்வா (23). வேத பாடசாலை மாணவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த 4 பேரும் பூஜைக்காக நேற்று முன் தினம் திற்பரப்பு அருவிக்கு சென்றனர். நேற்று பூஜைகள் முடிந்ததும் தடுப்பு அணைக்கு குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஷ்வா தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு GH-ல் சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.


