News December 23, 2025

கடலூர்: என்எல்சி-யில் நிலக்கரி சாம்பல் கடத்தல்

image

என்எல்சி அனுமதி இல்லாமல் நிலக்கரி சாம்பலை சட்டவிரோதமாக லாரிகளில் கடத்துவதாக 2ம் அனல் மின் நிலைய முதன்மை மேலாளர், தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் 2ம் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேல குப்பத்தைச் சேர்ந்த வேல்முருகன்(59), மகேஸ்வரன்(45) ஆகியோர் சட்டவிரோதமாக லாரியில் நிலக்கரி சாம்பல் கடத்திச் சென்ற நிலையில், இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News December 27, 2025

கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 27, 2025

கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

கடலூர்: 15 வயது சிறுமி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

image

கடலூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் கவுசிக் (19). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சோர்வாக காணப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கௌசிக்கை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!