News December 23, 2025
மயிலாடுதுறை மீனவர்கள் அவதி

திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் முகத்துவாரத்தில் அடிக்கடி மண்மேடுகள் ஏற்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். முகத்துவாரத்தை கடக்கும் விசைப்படகுகள் தரைதட்டி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மண்மேடுகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்
Similar News
News December 26, 2025
BREAKING மயிலாடுதுறை: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

குத்தாலம் அருகே அய்யனார்குடி நாட்டாறு சட்ரஸ் அருகே பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து ஆற்றின் கரையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 30 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News December 26, 2025
மயிலாடுதுறை: நகர செயலாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மயிலாடுதுறை நகர கழக செயலாளராக நாஞ்சில் கார்த்திக் என்பவர் இன்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பரிந்துரையின் பெயரில் அதிமுக தலைமையினால் ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 26, 2025
மயிலாடுதுறை: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க!

உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்.<


