News April 30, 2024
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் காங்கிரஸ்

தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை வலுப்படுத்த பாடுபட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜகவின் X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். முத்தலாக்குக்குத் தடை விதித்தோம். சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தோம். ராமர் கோயிலைக் கட்டினோம். ஆனால் காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறி வருகிறதென விமர்சித்துள்ளார்.
Similar News
News March 24, 2026
ஈரான் போர்… அமெரிக்காவுடன் கூட்டு சேரும் 2 நாடுகள்?

ஈரானுக்கு எதிராக சவூதியும், UAE-ம் போரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தனது விமானப்படை தளங்களை போருக்காக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கூறிய சவூதி, தற்போது King Fahd தளத்தை உபயோகிக்க USA-வுக்கு அனுமதியளித்துள்ளது. மேலும், UAE-ல் இயங்கும் ஈரான் தொடர்பான நிறுவனங்களை அந்நாட்டு அரசு மூடியுள்ளது. இதன்மூலம் போரில் ஈரானுக்கு எதிராக இவ்விரு நாடுகளும் இணைய தயாராவதாக கூறப்படுகிறது.
News March 24, 2026
பாஜக வளர்ந்தால் வளரட்டும்: பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என்ற கருத்தை EPS தவிடுபொடி ஆக்கியிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அதிமுகவை விழுங்க பாஜக நினைக்கவில்லை, அந்த அளவிற்கு அதிமுக சிறிய கட்சி இல்லை என்ற அவர், 27 தொகுதிகளை மட்டுமே வைத்துள்ள பாஜக எப்படி ஆட்சி அமைக்கும் எனவும் கேட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தால் வளரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 1.வில்லியனூர்- சிவா, 2.மங்கலம்- ரங்கன், 3.திருபுவனை- அங்காளன், 4.பாகூர்- செந்தில்குமார், 5.முதலியார்பேட்டை- சம்பத், 6.உப்பளம்- அனிபால்கென்னடி, 7.உருளையன்பேட்டை- கோபால், 8.நெல்லித்தோப்பு- கார்த்திகேயன், 9.ராஜ்பவன்- விக்னேஷ் கண்ணன், 10.காலாப்பட்டு- செந்தில் (எ) ரமேஷ், 11.கதிர்காமம்- வடிவேலு, 12.காரைக்கால் தெற்கு- நாஜிம், 13.நிரவி- நாக தியாகராஜன்.


