News December 23, 2025
ஜன.1 முதல் மிகப்பெரிய மாற்றம்.. முடங்கிவிடும்

ஜனவரி 1-ம் தேதி ✦PAN – ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வங்கி சேவைகள் & அரசின் நலத்திட்டங்களை பெற முடியும் ✦Credit Score-கள் வாரம் ஒருமுறை அப்டேட் செய்யப்படும். முன்னர், 15 நாள்களுக்கு ஒருமுறை Credit Score-கள் அப்டேட் செய்யப்பட்டன ✦SBI, PNB, HDFC போன்ற வங்கிகளில் FD-க்கான interest rate மாற்றியமைக்கப்படலாம் ✦8-வது ஊதியக் குழு அமலுக்கு வரும் என்பதால், சம்பளம் 35% வரை உயரலாம்.
Similar News
News January 16, 2026
விஜய் உடன் இணைந்த அடுத்த தலைவர்.. இபிஎஸ் அதிர்ச்சி

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வேலூர் மாவட்ட Ex மா.செ.,வுமான வாசு தவெகவில் இணைந்துள்ளார். 2006 – 2010 வரை வேலூர்(கி) மா.செ.,-வாக இருந்த இவர், 2009 லோக்சபா தேர்தலில் வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். Ex அமைச்சர் KC வீரமணியின் நம்பிக்கை முகமாக இருந்த இவர், திடீரென செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் இணைந்துள்ளது EPS தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
News January 16, 2026
ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News January 16, 2026
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.


