News April 30, 2024
KYC விவரங்களைப் புதுப்பிக்க மறுக்கும் எல்ஐசி கிளைகள்

வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்களை எல்ஐசி கிளைகள் புதுப்பிக்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேஒய்சி விவரங்களை அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று புதுப்பிக்கும்படி எல்ஐசியிடம் இருந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன்படி, அருகில் உள்ள கிளைக்குச் சென்று விண்ணப்பித்தால், அவர்கள் பாலிசி எடுத்துள்ள கிளைகளுக்குச் செல்லும்படி கூறி, அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
Similar News
News March 15, 2026
சொந்த வாகனங்களுக்கான FASTag கட்டணம் உயர்கிறது

சொந்த வாகனங்களுக்கான வருடாந்தர FASTag கட்டணம் 2.5% உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ₹3,000-லிருந்து ₹3,075 ஆக கட்டணம் உயர்கிறது. சொந்த கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே இக்கட்டண மாற்றம் பொருந்தும். வணிக ரீதியான வாகனங்களுக்கு தற்போதுள்ள கட்டண நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
News March 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னை நாவலூரிலுள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் (4 வயது பெண் & ஒன்றரை வயது ஆண்) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலிண்டர் வெடித்ததும் வீட்டுச்சுவரும் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மேலும் 7 பேர் ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அருகிலிருந்த 3 வீடுகள், பைக், கார் ஆகியவையும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 15, 2026
பயிரை மேய்ந்த வேலி: அன்புமணி ஆவேசம்

<<19388010>>SP அந்தஸ்து அதிகாரியே<<>> பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் மூலம் TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இப்படி நடந்து கொண்டுள்ளது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் சாடியுள்ளார்.


