News April 30, 2024
மேலும் 4 தொகுதிகளுக்கு காங். வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 4 வேட்பாளர் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. குர்கான், காங்க்ரா, ஹமிர்பூர், வடக்கு மும்பை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா ஹிமாச்சலின் காங்க்ரா தொகுதி வேட்பாளராகவும், ராஜ் பப்பர் அரியானாவின் குர்கான் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 22, 2026
கரூர் ஃபார்முலாவில் திமுக? செந்தில் பாலாஜி

கரூரில் வாக்காளர்களை அடைத்துவைக்க <<19438297>>மனிதப்பட்டிகளை<<>> திமுக தயார் செய்வதாக அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு வார்டுக்குமான பூத் கமிட்டி அலுவலகங்கள் தான் அவை என்றும், அதற்குரிய அனுமதியை முறையாக திமுக பெற்றுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மட்டுமே அதிமுகவினர் ஆளும்கட்சி மீது வைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
News March 22, 2026
கரூரில் அதிமுக 40,000 ஓட்டுகள் கூட வாங்காது: செந்தில் பாலாஜி

கரூரில் அதிமுக அபார வெற்றி பெறும் என EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியிருந்தார். அதற்கு, கரூரில் இருக்கிற 4 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடையும் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். தற்போதைய கள நிலவரப்படி, கரூரில் அதிமுக 40 ஆயிரம் வாக்குகளை தாண்டாது எனக்கூறிய அவர், தங்களை (திமுக) போன்று செயல்பட முடியாததை மறைப்பதற்காக தேர்தல் பரப்புரை தொடர்பாக புகார் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.
News March 22, 2026
மளமளவென சரிந்தது.. வரலாற்றில் முதல்முறை

மேற்கு ஆசிய நாடுகளில் போர் சூழல் நிலவும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ₹94.01 ஆக சரிந்துள்ளது. இதற்கு வெளியேறி வரும் வெளிநாட்டு முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


