News December 23, 2025

திண்டுக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News December 30, 2025

திண்டுக்கல்லில் சிறுமி கடத்தல்!

image

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17-வயது சிறுமியை காதலிப்பதாக கூறி திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (25) மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுக்குள்ளான நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News December 30, 2025

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 30, 2025

BREAKING: திண்டுக்கல்லில் அதிரடி கைது

image

திண்டுக்கல்லில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.1.4 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடியதாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில், அக்கடை ஊழியர்கள் ஆன செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார் கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!