News April 30, 2024
காந்தியின் கோரிக்கையை நிராகரித்த காங்கிரசார்

சுதந்திரத்துக்குப் பிறகு மகாத்மா காந்தி விடுத்த கோரிக்கையை காங். தலைவர்கள் நிராகரித்து விட்டதாக ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், 1947இல் சுதந்திரம் அடைந்தபிறகு, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதால், காங்கிரசைக் கலைத்து விடும்படி காந்தி கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். ஆனால் அந்தக் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்காமல் நிராகரித்து விட்டதாகவும் ராஜ்நாத் சிங் சாடினார்.
Similar News
News March 6, 2026
திமுக கூட்டணி உத்தேச தொகுதி எண்ணிக்கை நிலவரம்!

திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், அதிலுள்ள கட்சிகளின் உத்தேச தொகுதி எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக 157 இடங்களில் போட்டியிடுகிறதாம். காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8 (புதுச்சேரி 2), சிபிஐ 6, சிபிஎம் 6, முஸ்லிம் லீக் 2 ஆகிய கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுக 6, மநீம 3 உள்ளிட்ட பிற கட்சிகள் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறார்களாம்.
News March 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 6, 2026
‘US தாக்கினால் இந்தியாவை குறை சொல்ல முடியாது’

ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்று பாஜக தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். அவரது X பதிவில், இச்சம்பவம் இந்திய கடற்கரையிலிருந்து சுமார் 250 nautical miles தூரத்தில், சர்வதேச கடலில் நடந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச கடல் சட்டப்படி அந்த பகுதியில் நடந்த செயல்களுக்கு இந்தியாவுக்கு பொறுப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


