News December 23, 2025
புதுகை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

புதுகை மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க…
Similar News
News December 30, 2025
புதுகை: கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகமது இப்ராஹிம்(18) முகமது(18). இவர்கள் திருமயம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்துவந்த 2 பேரும் தேர்வெழுதிவிட்டு நேற்று டூவீலரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமயம் சாலையில் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது லாரியின் பின்பகுதியில் மோதியதில் பலத்த காயமடைந்த 2 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News December 30, 2025
புதுகை: சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்!

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சண்முகம் (77). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ஆலங்குடி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மட்டையன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (53) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சண்முகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
News December 30, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(டிச.29) இரவு 10 மணி முதல் இன்று(டிச.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


