News December 23, 2025
சென்னை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 979 வாக்குச்சாவடி மையங்களில், இன்று 23.12.25 முதல் 18.1.26 வரை (பண்டிகை நாட்கள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 30, 2025
சென்னை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், <
News December 30, 2025
சென்னை: குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9790241737, 044-26426421, 044-025952450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்
News December 30, 2025
பெங்கல் பரிசுகளை டோக்கன் மூலம் விநியோகிக்க திட்டம்!

2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி, சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,77,22,000 வேட்டி, 1,77,64,000 சேலை கொள்முதல் செய்யப்பட்டு 85 சதவீதம் ரேஷன் கடைகளுக்கு நகர்ந்துள்ளது. ரொக்கம், கரும்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது சென்னை மண்டலத்தில் முதற்கட்டமாக டோக்கன் மூலமாக பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.


