News December 23, 2025
தென்காசி: டீ கப் திருடிய டிக்டாக் பிரபலங்கள்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் பேபி சூர்யா, சித்திக் குத்துக்கல்வலசை பகுதியில் கருப்பட்டி காப்பி கடையில் டீ குடித்துவிட்டு டீ கப்பை திருடி செல்வது போல உரையாடியபடி ஒற்றைக் கையில் காரை இயக்கி வீடியோ வெளியிட்டனர். இவ்வீடியோ வைரலாகிய நிலையில், தவறான முன்னுதாரணமாக விளங்குவதாக டீ கடையின் உரிமையாளர் ரவுடி பேபி மற்றும் அவரது கணவர் மீது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
Similar News
News December 29, 2025
செங்கோட்டை: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு செல்கிறது. இனி இந்த ரயில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் செங்கோட்டையிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திற்கு காலை 6.05 மணிக்கு பதில் 7 .25 மணிக்கு சென்றடையும்.
News December 29, 2025
தென்காசி: உங்க வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

தென்காசி மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <
News December 29, 2025
குற்றால அருவிகளில் தொடர் விடுமுறை கொண்டாட்டம்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்தால் விழாக்கோலம் போல் காட்சியளித்தது.


