News December 23, 2025
விஜய் உடன் கூட்டணி.. மறைமுகமாக தெரிவித்தார்

திமுக, காங்., கூட்டணியில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் அங்கமாக (ஆட்சி அதிகாரத்தில் பங்கு) இருக்க வேண்டியது அவசியம் என காங்., மேலிட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தால் விஜய்யுடன் இன்றளவும் <<18646865>>காங்கிரஸ் பேச்சுவார்த்தை<<>> நடத்துவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 29, 2026
BREAKING: அண்ணாமலைக்கு புதிய பதவி

காரைக்குடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையிலும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் காரைக்குடியில் பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் அண்ணாமலை நியமனம் பார்க்கப்படுகிறது. பூத், வார்டு வாரியாக மக்கள் சந்திப்பை நடத்தும் அவர், சமுதாய தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசிக்கவுள்ளார்.
News January 29, 2026
இது எனது மரணத்திற்கு பிறகு வெளியாகும்: ஜாக்கி சான்

71 வயதான ஜாக்கி சான், தனது ரசிகர்களுடன் உணர்ச்சிபூர்வமான செய்தியை பகிர்ந்துள்ளார். பெய்ஜிங்கில் தனது புதிய திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஒரு சிறப்பு பாடலை பதிவு செய்துள்ளதாகவும், அது தனது மரணத்திற்கு பின்பே வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். இப்பாடலின் மூலம் தனது ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற அவர் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 29, 2026
கூட்டணி விஷயத்தில் EPS அப்செட்?

NDA-வில் பாமக(அன்புமணி), TTV, ஜான் பாண்டியன் இணைந்ததால் அக்கூட்டணி வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்த்தால் 2021-ல் போட்டியிட்ட (179 தொகுதிகள்) எண்ணிக்கையில் 12 தொகுதிகள் வரை குறையும் என அதிமுக கருதுகிறதாம். ஆனால், திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என இன்னும் சில கட்சிகளுக்கு பாஜக தூதுவிடுகிறதாம். இதனால், EPS அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.


