News December 23, 2025

திருப்பத்தூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 13, 2026

திருப்பத்தூர்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

image

திருப்பத்தூர் மக்களே.. எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து வரும் ஜன.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 13, 2026

மனம் திருந்தியவர்களுக்கு ரூ.50,000

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (ஜன-.2) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டின் மறுவாழ்வு நிதியின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய 17 நபர்களுக்கு தலா
ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதற்கான ரூ. 8,50,000 தொகைக்கான ஆணையை ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி வழங்கினார். இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News January 13, 2026

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் வருகிற ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. மேலும் இதில் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி நேற்று (ஜன.12) அறிவித்தார். பொதுமக்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

error: Content is protected !!