News December 23, 2025
கேமிங் உலகின் லெஜெண்ட் காலமானார்!

உலகப்புகழ் பெற்ற ‘Call of Duty’ கேமை உருவாக்கியவர்களில் ஒருவரான வின்ஸ் ஜாம்பெல்லா(55) கார் விபத்தில் மரணமடைந்துள்ளார். USA-ன் கலிபோர்னியாவின் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த மற்றொருவரும் மரணமடைந்துள்ளார். இவரின் Respawn Entertainment நிறுவனம் Apex Legends, Star Wars Jedi: Fallen Order போன்ற பேமஸ் கேம்களை உருவாக்கியுள்ளது. #RIP
Similar News
News January 1, 2026
விசிகவில் 48 மா.செ.,க்களை நீக்கிய திருமாவளவன்!

விசிகவில் 48 மா.செ.,க்கள் நீக்கப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 144 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் மண்டல பொறுப்பாளர்களாகவும், 48 பேர் நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். வரும் ஜூலையுடன் 96 மா.செ.,க்களின் பதவிக்காலம் நிறைவடைவதால், அதன் பின் நியமன முறையில் இல்லாமல் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
விஜய் ஒரு கிறிஸ்தவ வெறியர்: H.ராஜா

விஜய் ஒரு கிறிஸ்தவர் மட்டுமல்ல, கிறிஸ்தவ வெறியர் என H.ராஜா சாடியுள்ளார். இதை மட்டுமே வைத்து கிறிஸ்தவ வாக்குகளை விஜய்யால் பிரிக்க முடியாது என்ற அவர், ராகுல், பிரியங்கா கூட கிறிஸ்தவ வேடம் போட்டு பார்த்தார்கள்; ஆனால் குமரியை தாண்டி அவர்கள் ‘பாச்சா’ பலிக்கவில்லை என விமர்சித்துள்ளார். மேலும், கிறிஸ்தவர்கள் வாக்குகள் மட்டுமே தேர்தல் வெற்றிக்கு போதாது எனவும் அதை விஜய் உணர்வார் என்றும் கூறியுள்ளார்.
News January 1, 2026
தங்கம் விலை பெரிய அளவில் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(ஜன.1) பெரிய அளவில் குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $45.33 (₹4,079) குறைந்து $4,325-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வரும் தங்கம், புத்தாண்டு நாளிலும் பெருமளவு குறைந்துள்ளது. வெள்ளி விலையில் 1 அவுன்ஸ் $6.44 குறைந்துள்ளது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.


