News December 23, 2025
காஞ்சிபுரம்: கணவரால் வன்முறையா..? இத பண்ணுங்க!

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கணவரால், குடும்ப நபர்களால் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு அலுவலரை அணுகலாம். மேலும், சட்டத்தின் கீழ் நஷ்ட ஈடு, குழந்தை பராமரிப்பு, வசிப்பிட உரிமை போன்ற பாதுகாப்பு ஆணைகளைப் பெறலாம். முகவரி: மாவட்ட சமூகநல அலுவலகம், 43, காந்தி நகர் 2வது தெரு, காஞ்சிபுரம். ( SHARE )
Similar News
News January 12, 2026
காஞ்சி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News January 12, 2026
ஸ்ரீபெரும்புதூரில் அதிரடி கைது!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கட்சிபட்டு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(25). இவர், கோவர்தன் நகர் அருகே கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஆனந்தனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.


