News December 23, 2025

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’

image

விஜய்யின் கடைசி படம் என்பதால், ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் 17 நாள்கள் உள்ள நிலையில், முன்பதிவிலேயே தற்போது வரை ₹4.2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் நாள்களில் இன்னும் ஈசியாக ₹10 கோடியை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 26, 2025

வங்கதேசத்தின் தலைவிதியை மாற்றும் திட்டம்: தாரிக்

image

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பெளத்தர்கள் என அனைவருக்கும் வங்கதேசம் சம அளவு சொந்தமானது என BNP செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய அவர் முதலில் ஆற்றிய உரையில், நாட்டில் அமைதியை பேணுவது நமது பொறுப்பு என வலியுறுத்தினார். மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரு திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.

News December 26, 2025

SK-க்கு லவ் ஸ்டோரி சொன்ன சுதா கொங்கரா

image

‘பராசக்தி’ கதைக்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் லவ் ஸ்டோரி ஒன்றை சொல்லி ஓகே வாங்கியதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். அதன்பிறகே பராசக்தி கதையின் சில பகுதிகளை கூறியதுமே சிவா ஓகே சொல்லிவிட்டதாகவும், முழு ஸ்கிரிப்டையும் கேட்காமலே படத்திற்கு டிச., 2024 முதல் கால்ஷீட்டை ஒதுக்கியதாகவும் சுதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒருவேளை சுதா இயக்கத்தில் சிவா லவ் ஸ்டோரியில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

News December 26, 2025

திருமாவளவனும் சங்கி தான்: தமிழிசை

image

வடமாநிலங்களின் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்களை உருக்குலைத்த சம்பவங்களை மேற்கோள்காட்டி, தமிழகத்திலும் பாஜக ஆட்சியில் இருந்தால் இப்படித்தான் இருக்கும் என திருமா விமர்சித்திருந்தார். இந்நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு முத்திரை குத்தக்கூடாது என தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். மேலும், திருமாவளவனும் சங்கி தான் என அவர் காட்டமாக சாடினார்.

error: Content is protected !!