News April 30, 2024
வாணியம்பாடி அருகே விபத்து

வாணியம்பாடி அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கிரி சமுத்திரம் பகுதியில் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புல்டோசர் எந்திரத்தின் மீது 45 பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் 8 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News March 12, 2026
திருப்பத்தூர்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
திருப்பத்தூர்: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


