News December 23, 2025

தூத்துக்குடி: ரயில் மோதி பரிதாப பலி!

image

தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் சுந்தரவேல் (47). இவர் கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் மனநல சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக நெல்லை வந்தார். குலவணிகர்புரம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News December 27, 2025

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதிகள் மின்தடை அறிவிப்பு

image

27.12.2025 தூத்துக்குடி டூவிபுரம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட விவிடி சிக்னல்,ராஜாஜி பார்க் வரை மாநகராட்சியால் மரக்கிளைகள் அகற்றும் பணி காலை 09.30 மணி முதல் 12.00 மணிக்குள் நடைபெறுவதால் பாளை ரோடு,டூவிபுரம் மெயின் ரோடு,டுவிபுரம் 2வது தெரு,சிதம்பர நகர் மாநகராட்சி வணிக வளாகம்,சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்l விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்பதை தெரிவித்துள்ளனர்.

News December 27, 2025

தூத்துக்குடி: கடைக்குள் அரிவாளுடன் புகுந்து மிரட்டல்

image

சாத்தான்குளம் உள்ள பேய்குளம் பஜாரில் நெல்லையை சேர்ந்த ஆறுமுக நயினார் என்பவர் சொகுசு காரில் வந்த இவர் கையில் அரிவாளுடன் பஜாரில் வருவோர் போவோர்களிடம் மிரட்டியவாறு கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பூக்கடைக்கு சென்று பூக்கடையில் உள்ளவர்களையும் மிரட்டியதுடன் பூக்கடை உரிமையாளரை வெட்டி விடுவேன் என கூறியுள்ளார். பஜாரில் பாதுகாப்பு பணியில் இருந்த சாத்தான்குளம் போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 27, 2025

தூத்துக்குடியில் இன்று முதல் 4 நாட்கள்; தவறவிடாதீர்கள்!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி டிசம்பர்.27 டிசம்பர்.28ஆம் தேதி மற்றும் ஜனவரி 3 மற்றும் 4 ஆம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர் விண்ணப்ப படிவம், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள், பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். *SHARE

error: Content is protected !!