News December 23, 2025
புதுகை: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

புதுகை மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI
Similar News
News December 27, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய தகவல்

புதுகை மாவட்டத்தில் 17 நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் இதுவரை 37, 822 பேர் பயன் அடைந்துள்ளனர். ஒரு மருத்துவ முகாமில் சராசரியாக 1400 க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த முகாம்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடுகள், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறிதல், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்ளிட்டவை செய்யப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
புதுகை: பெண் குழந்தை உள்ளதா? உடனே விண்ணப்பிக்கவும்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய புதுகை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
புதுக்கோட்டை: 3 பவுன் சங்கிலி பறிப்பு

அறந்தாங்கி அருகே அலஞ்சிரங்காடு பகுதியை சேர்ந்தவர் சிவமாலை, இவர் நேற்று அதிகாலை 4 மணிக்கு இவரது வீட்டின் அருகே உள்ள மாட்டுத்தொழுவத்தில் சிவமாலை பால் கறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் சிவமாலையை இரும்பு கம்பியால் தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கீரமங்கலம் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


