News December 23, 2025
BREAKING: தர்மபுரி: போக்சோ கைதியான ஆசிரியர் மரணம்!

தர்மபுரி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கடந்த நவ.16ஆம் தேதி பாலியல் தொல்லை தந்த சமூக அறிவியல் ஆசிரியர் மணிவண்ணன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தார். இந்நிலையில், நேற்று(டிச.22) இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.
Similar News
News January 15, 2026
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் ,தோப்பூரில் ஜீலான்பாஷா, மதிகோன்பாளையத்தில் ஹரிச்சந்திரன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 15, 2026
தருமபுரி :ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

(ஜன.14)தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தநோக்கத்திற்கான TANFINET விண்ணப்ப இணைய தள இணைப்பை (https://tanfinet.tn.gov.in) பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்மபுரி ஆட்சியர் சதீஸ் தெரிவித்தார்.
News January 15, 2026
தர்மபுரியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, குறள் சார்ந்த ஓவியப்போட்டி

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, குறள் சார்ந்த ஓவியப்போட்டி (ஜன.19) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.போட்டிகள் தொடர்பான விவரங்களுக்கு 04342-230774 என்ற தொலைபேசி எண்ணிலும், போட்டியில் கலந்து கொள்ள tamildev.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.தர்மபுரி ஆட்சியர் சதிஸ் அறிவித்துள்ளார்.


