News December 23, 2025
நெல்லை: இனி Whatsapp மூலம் ஆதார் அட்டை!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
நெல்லை: மனைவி இறந்த சோகத்தில் கணவர் விபரீத முடிவு!

நெல்லை சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயில்ராஜ் வயது (68). இவரது மனைவி மற்றும் ஒரே மகள் இறந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனால் சோகத்தில் தவித்த அவர் நேற்று விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 29, 2025
நெல்லை: பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி!

கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து 2 பேர் நேற்று பைக்கில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஓட்டப்பிடாரம் முனியசாமி 36 சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 29, 2025
நெல்லை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


