News December 23, 2025

விருதுநகர் பள்ளி மாணவிகள் சென்ற வாகனம் விபத்து

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே அ.முக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரையாண்டு தேர்வு எழுதி மதியம் வீடு திரும்பிய 7 மாணவிகள் சென்ற ஆட்டோ, நரிக்குடி–திருப்புவனம் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மாணவிகள் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 3 மாணவிகள் அ.முக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

விருதுநகர் மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

image

விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்க <<>>மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 28, 2025

விருதுநகர்: குடிக்க பணம் தராததால் மகன் தற்கொலை

image

வத்திராயிருப்பு அருகே மேலக்கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் முருகானந்தம் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இன்று முருகானந்தம் அம்மா சுந்தரம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தராததால் வீட்டின் மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News December 28, 2025

விருதுநகர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

image

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் ரோட்டில் முனியாண்டி கோவில் பின்புறம் மலை அடிவாரத்தில் விஜயராகவன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.இங்கு நேற்று காலை 6:30 மணிக்கு வனகாப்பாளர் ஆனந்தி குழுவினர் ரோந்து செல்லும் போது 7 இடங்களில், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

error: Content is protected !!