News December 23, 2025

தி.மலை: மச்சான் கழுத்தை அறுத்த அக்கா கணவன்!

image

செ.ஆண்டாப்பட்டு, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமணகிரி(24). இவர், தனலட்சுமி(20) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ரமணகிரியும், தனலட்சுமியின் தம்பி குபேந்திரனும்(19) நேற்று முன் தினம் இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் குபேந்திரனின் கழுத்தை ரமணகிரி பிளேடால் அறுத்தார். இதில் படுகாயமடைந்த குபேரன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரமணகிரியை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 27, 2025

தி.மலை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

தி.மலை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News December 27, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று, வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகள் பெற 27, 28 டிசம்பர் 2025 மற்றும் 3, 4 ஜனவரி 2026 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

News December 27, 2025

ஆரணி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச-27) காலை முதல் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சுற்றுப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!