News December 23, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் SBI KYC அப்டேட் போன்ற மேலே உள்ள புகைப்படத்தை போல், தங்கள் தொலைபேசிக்கு வரும் எந்த ஒரு APK பைல்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அப்படி பதிவிறக்கம் செய்தால் தங்களுடைய மொபைல் ஹேக் செய்யப்படும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோக நேரிடும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News December 25, 2025
மயிலாடுதுறை: இனி பட்டா பெறுவது ஈஸி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். இதனை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
மயிலாடுதுறை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
மயிலாடுதுறையில் 452 பேருக்கு பணி நியமனம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளை சேர்ந்த 1,524 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில், 20 நிறுவனங்கள் மூலம் 452 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


