News April 30, 2024
எண்ணெய் நீராடுவோர் கவனத்துக்கு

உடல்சூட்டைத் தணிக்க எண்ணெய் நீராடுவது பொதுவான வழக்கம். இப்படி எண்ணெய் நீராடல் மேற்கொள்வதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. உடல்வெப்பத்தை தணிக்க நாள்தோறும் எண்ணெய் நீராடக்கூடாது, அப்படி நீராடினால் குளிர் காய்ச்சல் போன்ற பின்விளைவு ஏற்படும். தலையில் எண்ணெய் வைத்துவிட்டு, நீண்ட நேரம் கழித்து நீராடக் கூடாது. அப்படி நீராடினால், காதுவலி, முகவீக்கம், சைனஸ் போன்றவை ஏற்படக்கூடும்.
Similar News
News July 7, 2025
ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ₹1 லட்சம் செலவு

சுவற்றில் பெயிண்ட் அடித்து பார்த்திருப்போம், ஆனால் ஒரு நிறுவனம் அரசு கஜானாவிலே அடித்துள்ளது. ம.பி-ல் உள்ள அரசுப்பள்ளியில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ₹1,06,984 செலவழிக்கப்பட்டதாம், மற்றொரு பள்ளியில் 10 ஜன்னல்கள், 4 கதவுகள் பொருத்தப்பட்டு பெயிண்ட் அடிக்க ₹2,31,685 செலவானதாம். இப்பணியில் 648 பேர் ஈடுபட்டதாக கூறி செலவுக்கான ரசீதையும் அரசுக்கு வழங்கியது சுதாகர் கன்ஸ்டரக்ஷன் எனும் நிறுவனம்.
News July 7, 2025
சீன அதிபர் ஜி ஜின் பிங் ஓய்வு?

சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளாராம். இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தியா தவிர அனைத்து பிரிக்ஸ் நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக உள்ளது. இப்படியான சூழலில் அவர் ஓய்வு பெற உள்ளதாக வரும் தகவல்கள் அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
News July 7, 2025
இனி ஹாஸ்டல்கள் இல்லை ‘சமூகநீதி விடுதிகள்’

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது சமூக நீதி பாதையில் முன்னேறி செல்லும் திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று என நெட்டிசன்கள் பலரும் வரவேற்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.