News December 23, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

பள்ளி மாணவர்களின் உற்சாகத்துக்கு இன்று எல்லையே கிடையாது. ஏனென்றால், 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. நாளை (டிச.24) முதல் ஜன.4 வரை 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜன.5 அன்றே பள்ளிகள் திறக்கும். எனவே, விடுமுறையை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களுக்காக <<18631046>>சிறப்பு<<>> பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 3, 2026

பதற்றத்திற்கு மத்தியில் IND vs BAN போட்டிகள் அறிவிப்பு

image

ஒத்திவைக்கப்பட்ட IND vs BAN இடையிலான டி20 மற்றும் ODI தொடர், வரும் செப்டம்பரில் நடக்க உள்ளதாக வங்கதேச கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 போட்டிகளை கொண்ட ODI தொடர் செப்டம்பர் 1, 3, 6-ம் தேதிகளிலும், டி20 தொடர் 9, 12, 13-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய அணி அந்த நாட்டிற்கு சென்று இந்த போட்டிகளில் விளையாட உள்ளது.

News January 3, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 3, 2026

விஜய் கட்சியில் இதற்குதான் இணைந்தேன்: ஜேசிடி பிரபாகர்

image

அதிமுகவில் பிரிந்தவர்களை இணைக்கும் பணி கைகொடுக்காததால் <<18744071>>தவெகவில் இணைந்ததாக<<>> ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும், எம்ஜிஆரைப் பார்த்தபோது என்ன மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதேபோல் விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். வீட்டுக்கு வீடு விஜய் முழக்கம் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ஒரு மாற்றம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!