News December 23, 2025
ஜெயிலர் 2 படத்தில் கேமியோ சற்று அதிகம்: சிவராஜ்குமார்

‘ஜெயிலர் 2’ படத்தில் தான் நடிப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார். ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், ஜனவரிக்குள் தனது பகுதி முடிவடையும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருவதாகவும், இதில் தனது ரோலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிஸ்யூ சம்பவக்காரனாக சிவராஜ்குமாரை பார்க்க ரெடியா?
Similar News
News January 15, 2026
NDA கூட்டணி, சின்னத்தை உறுதி செய்தார்.. விஜய் தரப்பு அப்செட்!

புதுவையில் புதிதாக கட்சி தொடங்கிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் <<18864228>>நேற்று NDA கூட்டணியில்<<>> இணைந்தார். இது, NR ரங்கசாமியுடன் விஜய்யின் தவெக இணைய முட்டுக்கட்டையாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம், ஜோஸ் சார்லஸ் மார்டினின் மைத்துனரான ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில், இன்று, NDA கூட்டணியில் காமராஜ் நகர், நெல்லித்தோப்பு தொகுதிகளை LJK-வுக்கு ஒதுக்கவும், தாமரை சின்னத்தில் போட்டியிடவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
News January 15, 2026
₹20 லட்சம் வேணுமா? இதோ இருக்கு அசத்தல் திட்டம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் ₹20 லட்சம் தொகையை பெறலாம். உங்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியவில்லை என்றால், தினமும் ₹50 செலுத்துங்கள். 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை பெறலாம். இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.
News January 15, 2026
விபத்தில் 6 பெண்கள் பலி.. பொங்கல் நாளில் சோகம்!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கார் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர சங்கராந்தி விழாவுக்கு(வட மாநிலங்களின் பொங்கல்) பதேபூருக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.


