News December 23, 2025
சீமானும் விஜய்யும் பாஜகவின் பிள்ளைகள்: திருமாவளவன்

RSS-க்காக விஜய் கட்சி தொடங்கியுள்ளதாக திருமாவளவன் சாடியுள்ளார். திமுகவை தீய சக்தி என கூறும் விஜய், முடிந்தால் திமுகவை அழிக்கட்டும் என ஆவேசமாக கூறியுள்ளார். அதேபோல், பிரபாகரன் பெயரை கூறி தமிழக மக்களை ஏமாற்ற சீமான் கணக்கு போட வேண்டாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், சீமானும் விஜய்யும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்றும் திருமா காட்டமாக தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 29, 2025
புதுச்சேரி: துணை ஜனாதிபதி புதுச்சேரி வருகை

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், துணை ஜனாதிபதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 29, 2025
BREAKING: விஜய்க்கு கடும் எச்சரிக்கை

அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசமாட்டேன் என விஜய் கூறியதற்கு பதிலடி கொடுத்த அவர், இப்படி சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் என ஒருமையில் பேசினார். மேலும், முகக் கவர்ச்சியும், அடுக்கு மொழியும் இல்லாமலே EPS கூட்டத்திற்கு மக்கள் வருவதாகவும், இதை செய்யமுடியாத விஜய் நாவை அடக்கி பேசவேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
News December 29, 2025
2025-ல் அதிகம் விற்பனையான போன் இதுதான்!

நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகமாக விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஐ-போன் 16 முதலிடம் பிடித்துள்ளது. இதுகுறித்து Counterpoint Research data வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 65 லட்சம் ஐ-போன் 16 மொபைல்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 48 லட்சம் போன்களை விற்று Vivo Y29 2-ம் இடத்தை பிடித்துள்ளது. நீங்கள் என்ன போன் யூஸ் பண்றீங்க?


