News December 23, 2025
புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை (CBI) மற்றும் என்ஐஏ (NIA) அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.
Similar News
News December 25, 2025
புதுவை: 3 பேரிடம் ஆன்லைன் மோசடி

புதுவை, வில்லியனூரைச் சேர்ந்தவரின் போன் எண்ணுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ரூ.20 ஆயிரமும்; இதேபோல் வேறு நபரிடம் ரூ.19,479-ம்; சேதராப்பட்டு சேர்ந்தவரின் செல்போன் எண்ணுக்கு வங்கியின் பெயரில் குறுஞ்செய்தியாக லிங்க் அனுப்பி அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.12,400-ம் திருடப்பட்டது. இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
புதுவை: உங்க பட்டாவில் வில்லங்கம் இருக்கா?

பட்டா மாற்றம் செய்த பிறகு வில்லங்கம் வராமல் இருக்க இதனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் VAO அலுவலகத்தில் FMT வரைபடத்தில் உங்கள் பெயரில் மாறிய பட்டாவின் சர்வே என்னை Update செய்ய வேண்டும், VAO அலுவலகங்களில் பதிவேட்டில் உங்கள் பெயரை சரியாக அப்டேட் செய்ய வேண்டும். சிட்டாவில் உங்கள் பெயர் மற்றும் சர்வே எண் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை VAO அலுவலகங்களில் நேரில் சென்று சரிபார்க்க வேண்டும். SHARE IT NOW
News December 25, 2025
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு (அரியர்) மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஜனவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


